வீட்டில் கரையான் தொல்லை இருக்கின்றதா? அதை தீர்க்க இதோ சில எளிமையான டிப்ஸ்!
Author -
Verity News Tamil
December 18, 2024
0
நம்முடைய வீட்டில் இருக்கும் கரையான்களை முற்றிலுமாக அழித்து நம்முடைய வீட்டின் மரப் பொருட்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள சில எளிமையான வழிமுறைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
நாம் அனைவரும் நம்முடைய வீட்டில் எதாவது ஒரு மரத்தினால் செய்யப்பட்ட பொருள் ஒன்றை வைத்திருப்போம். அது நாட்கள் செல்ல செல்ல அந்த மரப் பொருளானது கரையான்களால் அரிக்கப்பட்டு எதற்கும் உதவாமல் பயன்படாமல் போய்விடும்.
இந்த கரையான்கள் மரத்தினால் செய்யப்பட்ட பொருட்களில் கூடு கட்டி அந்த மரப் பொருளை சிறிது சிறிதாக அரித்து மொத்தமாக வீட்டையே பாதிப்புக்கு உள்ளாக்கி விடும். அவ்வாறு பாதிப்பை ஏற்படுத்தும் கரையான்களை எவ்வாறு முற்றிலுமாக அழிப்பது என்பது குறித்து இந்த பதிவில் தற்பொழுது பார்க்கலாம்.
கரையான்களை அழிக்கும் சில எளிமையான வழிமுறைகள்...
* வேப்ப எண்ணெயை ஒரு தேங்காய் தொட்டியில் எடுத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு பஞ்சை எடுத்து வேப்ப எண்ணெயை தொட்டு மரப் பொருள்களில் கரையான்ககள் இருக்கும் இடங்களில் தேய்த்து விட வேண்டும். மேலும் கரையான்களை எங்கெல்லாம் இருக்கின்றதோ அங்கு எல்லாம் தேய்த்து விட்டால் கரையான்களை அழிந்து விடும்.
* பிறகு 5 கிராம்புகளை எடுத்து அதை பொடி செய்து கொள்ளவும். பின்னர் அந்த கிராம்பு பொடியை தண்ணீரில் கலந்து அதை ஸ்பிரே பாட்டில் ஒன்றில் ஊற்றிக் கொண்டு அதை கரையான்கள் இருக்கும் இடத்தில் ஸ்ப்ரே செய்து விட வேண்டும். இவ்வாறு செய்வதால் கரையான்களை அழிக்க முடியும்.
* அடுத்ததாக சிறிய கிண்ணம் ஒன்றில் தேங்காய் எண்ணெய் சிறிதளவு எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் கற்பூரம் ஒன்றை பொடித்து போட்டு அதை நன்றாக கலந்து கொண்டு பின்னர் ஒரு டூத் பிரஸ் ஒன்றை எடுத்து அதில் நினைத்து கரையான்கள் இருக்கும் இடத்தில் தேய்த்து விட்டால் கரையான்கள் முற்றிலுமாக அழியும்.
* கரையான்களை அழிக்க முக்கியமான பொருள் மிளகாய் தூள் ஆகும். கரையான்கள் இருக்கும் இடத்தில் மிளகாய் தூளை போட்டு விட்டால் கரையான்கள் முற்றிலுமாக அழிந்து விடும்.
* வேப்பிலை பொடியை எடுத்துக் கொள்ள வேண்டும். அல்லது வேப்பிலையை காய வைத்து அதை பொடி செய்து விட்டு அந்த பொடியை கரையான்கள் இருக்கும் மரப் பொருள்தளில் மீது போட்டு விட்டால் கரையான்கள் அழிந்து விடும்.