கண்களை பாதுகாக்க அருமையான வழிமுறைகள்!! இனி கண்ணாடியே உங்களுக்கு தேவை இல்லை!
Author -
Verity News Tamil
December 17, 2024
0
நம்முடைய உடலில் உள்ள உறுப்புகளில் முக்கியமான உறுப்பு கண்கள் தான். இன்றைய காலகட்டத்தில் நாம் அனைவரும் உடலை நன்றாக ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நாம் பல்வேறு உடல் பயிற்சிகளை செய்கின்றோம். ஆனால் கண்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள எந்தவொரு முயற்சியும் எடுப்பதில்லை.
கண்களின் ஆரோக்கியம் நம் உடலுக்கு மிக முக்கியமான ஒன்று. நம்மில் பலரும் தற்பொழுது பார்வை சரியாகத் தெரிவதில்லை என்று கூறி மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொண்டு கண்கள் நன்றாக தெரிய வேண்டும் என்று கண்ணாடி அணிகிறோம். ஆனால் இந்த பதிவில் கூறப்பட்டிருக்கும் இந்த வழிமுறைகளை நாம் பின்பற்றினால் கண்ணாடியே தேவையில்லை.
பார்வை தெளிவாகவும் தூய்மையாகவும் தெரிய ஒரு சில பயிற்சிகள் பற்றி இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளோம். இந்த பயிற்சிகளை செய்தால் இனி கண்ணாடி தேவையில்லை. அது என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.
கண்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான வழிமுறைகள்...
* நாம் அனைவரும் 20-20-20 என்ற விதிமுறையை பின்பற்ற வேண்டும். இந்த 20-20-20 விதிமுறை கண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான ஒரு விதிமுறை. 20-20-20 என்றால் 20 நிமிடங்களுக்கு ஒரு முறை 20 அடி தூரத்தில் இருக்கும் ஏதேனும் ஒரு பொருளை 20 வினாடிகள் பார்க்க வேண்டும். இவ்வாறு செய்வதால் கண்களில் வறட்சி உண்டானது தடுக்கப்படும்.
* வீட்டில் எதாவது ஒரு அறையில் சென்று அனைத்து விளக்குகளையும் அனைத்து விட்டு அமர்ந்து கொள்ளவும். பின்னர் 5 அடி தூரத்தில் ஒரு மெழுகுவர்த்தியை வைத்து அதை பற்ற வைக்க வேண்டும். எந்த பக்கமும் பார்க்காமல் அந்த மெழுகுவர்த்தியின் ஒளியை மட்டும் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். நம்முடைய கண்களில் நீர் வரும் வரை கண்களை கலக்காமல் பார்த்துக் கொண்டிருந்தால் நம்முடைய கண்களில் தூசி அழுக்கு என ஏதேனும் இருந்தால் அது வெளியேறி விடும்.
* வாரத்திற்கு ஒரு முறை தேங்காய் எண்ணெயை லேசாக சூடாக்கி தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் கழிந்து குளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் நம்முடைய உடல் சூடு குறைந்து உடல் குளிர்ச்சி அடையும். இதனால் கண்கள் குளிர்ச்சி பெறும். மேலும் கண்களின் ஆரோக்கியம் அதிகரிக்கும்.
* தற்பொழுது அனைவரிடமும் இருக்கும் ஒரு பழக்கம் விடிந்தவுடன் எழுந்து செல்போன்களை பார்ப்பது தான். இது கண்களுக்கு மிகவும் ஆபத்தான செயல் ஆகும். எனவே எழுந்தவுடன் செல்போன் பார்ப்பதை தவிர்த்து விடுங்கள். மேலும் காலையில் எழுந்தவுடன் முகத்தை நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். இவை கண்களுக்கு நல்லது.
* உடலுக்கு எவ்வாறு உடற்பயிற்சி இருக்கின்றதோ அதே போல கண்களுக்கும் சில பயிற்சிகள் இருக்கின்றது. அதை முறையாக அறிந்து செய்ய வேண்டும். மேலும் கண்களுக்கு மசாஜ் செய்வது கண்களை நன்றாக மேலும் கீழுமாக அமைப்பது போன்ற செயல்களை செய்வதாலும் கண்களின் ஆரோக்கியம் மேம்படும்.