ரயிலில் பயணம் செய்யும் நபர்களா? டிக்கெட்டுடன் அவசியமாக இதையும் எடுக்க வேண்டும்! இந்திய ரயில்வே உத்தரவு!
Author -
Verity News Tamil
December 18, 2024
0
ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் அனைவருக்கும் முக்கியமான அறிவிப்பு ஒன்றை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது. அதாவது ரயில்வே டிக்கெட்டுடன் சேர்த்து அசல் சான்று ஒன்றையும் வைத்திருக்க வேண்டும் என்று இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
நாம் பொதுவாக பேருந்து, விமானம், ரயில் என்று வசதிக்கு ஏற்ப பயணம் செய்து வருகின்றோம். இதில் முன்பதிவு செய்தும் முன்பதிவு செய்யாமல் டிக்கெட் எடுத்தும் பயணம் செய்வது போல நடைமுறை உள்ளது. இதில் முன்பதிவு செய்யும் நடைமுறையில் நமக்கு விருப்பமான இருக்கைகளை நாம் தேர்வு செய்து புக் செய்யும் வசதியும் இதில் உள்ளது.
நாம் டிக்கெட்டுகளை புக் செய்யும் பொழுது அதற்கு தேவையான சான்றிதழ்கள் தேவைப்படும். அதை வைத்து நாம் புக் செய்து கொள்ளலாம். தற்பொழுது இதில் இந்திய ரயில்வே தற்பொழுது முக்கியமான விதிமுறை ஒன்றை கொண்டு வந்துள்ளது. முன்பு குறிப்பிட்டது போல பயணிகள் முன்பதிவு செய்து டிக்கெட் எடுத்து ரயிலில் பயணம் செய்யும் பொழுது டிக்கெட் புக் செய்யும் பொழுது பயன்படுத்திய ஆவணமோ அல்லது வேறு எதாவது அசல் சான்றிதழ் ஒன்றை எடுத்து செல்ல வேண்டும் என்று இந்திய ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அந்த வகையில் அசல் சான்றிதழ் எடுத்து செல்லாமல் பயணம் செய்தால் அது கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அபராதம் விதிக்கப்படும் என்றும் இந்திய ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் அனைவரும் பின்வரும் அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை முன்பதிவு செய்த பயணச் சீட்டுடன் எடுத்துச் செல்ல வேண்டும்.
* ஆதார் கார்டு
* வாக்காளர் அடையாள அட்டை
* பாஸ்போர்ட்
* பான் கார்டு
* ஓட்டுநர் உரிமம்
* புகைப்படத்துடன் இருக்கும் அதே சமயம் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆவணம்
பயணத்தின் பொழுது நீங்கள் அசல் சான்றிதழ் அல்லது ஐடி எடுத்துச் செல்லவில்லை என்றால் நீங்கள் வைத்துள்ள டிக்கெட் தவறான டிக்கெட்டாக கருதப்படும். அதன்படி டிக்கெட் பரிசோதகர் உங்களுக்கு அபராதம் விதிக்க நேரிடும். மேலும் ரயிலில் இருந்து பாதியில் இறக்கி விட நேரிடும்.
எனவே நீங்கள் பயணம் செய்யும் பொழுது முன்பதிவு செய்த டிக்கெட்டுடன் சேர்ந்து அசல் ஆவணம் ஒன்றை எடுத்துச் செல்லுங்கள். மேலும் மூத்த குடிமக்கள் அனைவரும் வயதை உறுதிபடுத்தும் சான்றிதழ் ஒன்றை எடுத்து செல்ல வேண்டும். நீங்கள் பயணத்திற்கு கிளம்பும் பொழுது முன்பதிவு செய்த டிக்கெட் மற்றும் அசல் சான்றிதழ் இரண்டிலும் உள்ள தகவல்கள் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.